நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்!

தஞ்சாவூர்: கள்ளக்காதல் ஜோடிகள் ஊரை விட்டு ஓடிப்போவார்கள். சிலரோ எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் ஒரே ஊரில் குடியிருப்பார்கள். நண்பனின் மனைவியை செட் செய்த வடிவேலுவும், கணவனை விட்டு விட்டு கணவரின் நண்பருடன் போன கலையரசியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சாகும் போது, ஒன்றாக வாழ முடியவில்லை என்பதால் சாகிறோம் எங்களை ஒன்றாக புதையுங்கள் என்று கூறி கடிதம் எழுதி வைத்துள்ளனர். உயிரிழந்த கள்ளக்காதல் ஜோடிகள் அதிராமப்பட்டிணத்தை அடுத்த ஏரிப்புறாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஜெயக்குமார் கூலித்தொழிலாளி. அவரது மனைவி கலையரசி. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கலையரசி சத்துணவு அமைப்பாளராக வேலை செய்கிறார். ஒரே ஊரைச்சேர்ந்த வடிவேலு என்பவர் ஜெயக்குமாருக்கு உயிருக்கு உயிரான நண்பராவார். அடிக்கடி ஜெயக்குமார் வீட்டுக்கு வடிவேலு வந்து போவார். அப்போது கலையரசி உடன் சகஜமாக பேசி பழகினார். அவரும் அண்ணா என்றுதான் முதலில் அழைத்ததால் ஜெயக்குமாரும் எதார்த்தமாக விட்டு விட்டார்.

வடிவேலுவிற்கும் திருமணமாகி சவுந்தர்யா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஜெயக்குமார் வீட்டில் இல்லாத நேரத்திலும் வடிவேலு வந்து போக ஆரம்பித்தார். இவர்களின் கள்ளத்தொடர்பு ஊர்காரர்களுக்கு தெரியவரவே, ஜெயக்குமாரின் காது பட பேச ஆரம்பித்தனர். மனைவியை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் விவாகரத்து செய்து விட்டு தனியாக போனார். கடந்த வாரம் கலையரசியும், வடிவேலுவும் ஊரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் கலையரசியின் பிள்ளைகளும், வடிவேலுவின் குடும்பத்தினரும் பரிதவித்துப் போனார்கள்.

அவர்களைப் பற்றி ஊரே பேசியது. இரு தினங்களுக்கு முன்பு இருவரும் வயலில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தனர். வடிவேலு மரணமடைந்த நிலையில் கலையரசியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது மரணமடைந்தார். வடிவேலுவின் சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் நாங்கள் இந்த உலகத்தை விட்டே போகிறோம் எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. அன்பால் இணைந்த நாங்கள் இங்கு வாழ முடியாமல் ஒன்றாக சாகிறோம். எங்களை ஒன்றாக புதையுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

நண்பனின் மனைவி என்றும் பார்க்காமல் தகாத உறவில் ஈடுபட்டதால் கடைசியில் உயிரை மாய்த்துக்கொண்டார் வடிவேலு. கணவன் குழந்தைகளை விட்டு விட்டு கணவரின் நண்பருடன் உறவில் ஈடுபட்டதால் உயிரை விட்டார் கலையரசி. அதிராமபட்டிணத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *