பெருக்க வந்த பெண்ணை கட்டிப்பிடித்து.. அசிங்கம் செய்த 50 வயசு நாகராஜ் – வீடியோ

பெருக்க வந்த பெண்ணை கட்டிப்பிடித்து.. அசிங்கம் செய்த 50 வயசு நாகராஜ்.. அரசு அதிகாரியின் பகீர் வீடியோ

பரமக்குடியில் பெண்ணிடம் சில்மிஷத்தில் 2 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்
பரமக்குடி: ஆபீஸை பெருக்க வந்த பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து கொஞ்ச நஞ்சம் அக்கிரமமா செஞ்சு வெச்சிருக்கார் இந்த 50 வயசு நாகராஜ்? அதிலும் இவர் ஒரு அரசு அதிகாரி என்பது பெருத்த ஷாக்!

வாட்ஸ்அப்-ல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்ப்பவர்தான் அந்த பெரிய மனுஷன்.. பெயர் நாகராஜ்.. மின்பாதை ஆய்வாளர் வேலையில் உள்ளார்.1e028940681bdb5e20a88e9ea9f97eac

இந்த வீடியோ என்னைக்கு எடுத்ததுன்னு தெரியலை. அந்த ஆபீசுக்கு ஒரு துப்புரவு பெண் ஊழியர், பெருக்கி சுத்தப்படுத்த வருகிறார். ஆனால் அதற்கு முன்பேயே அந்த ஆபீசில் நாகராஜ் ஆஜராகி இருக்கிறார். இன்னொரு ஊழியரும் வந்துள்ளார்.

ஏதோ வேலையில் ரொம்ப அக்கறை எல்லாம் இல்லை.. எல்லாம் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபடத்தான். அந்த பெண்ணின் அருகில் சென்று முதலில் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப்பிடிக்கிறார். இதை இன்னொரு ஊழியரை வீடியோ எடுக்க சொல்கிறார். அந்த ஊழியரும் இந்த கண்றாவியை செல்போனில் படம் பிடிக்கிறார்.

0696edf5655f6bb8168ed6e6e1e327d5.jpg

நாகராஜின் பிடியில் இருந்த அந்த பெண், “விடு என்னை.. விடு என்னை..” என்று சொல்கிறார். ஆனாலும் நாகராஜ் விடவில்லை.. திரும்ப திரும்ப கட்டிப்பிடிக்கிறார். ஒவ்வொரு முறை கட்டிப்பிடிக்கும்போதும் “போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா” என்று நாகராஜ் சொல்ல, அந்த பெண்ணோ போட்டோவும் “வேணாம், ஒரு மசுரும் வேணாம்.. அசிங்கமா கேட்டுட போறேன்” என்று சொல்கிறார். “போட்டோ எடுத்தாச்சு” என்று மற்றொரு ஊழியர் சொல்லவும், திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து அலேக்காக கட்டிக் கொள்கிறார் நாகராஜ்!

13a4aab20bac2cca4dfa55e7ba93c930.jpg

இதுதான் அந்த வீடியோ.. இதில் என்ன கூத்து என்றால், 3 பேருமே கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் சிரிக்கிறார்கள். ஒரு அதிகாரி என்ற உணர்வு நாகராஜூக்கோ, இப்படி கேவலமாக வீடியோ எடுக்கிறோமே என்ற உணர்வு அந்த ஊழியருக்கோ சுத்தமாக இல்லை. அதேபோல, செருப்பை கழட்டி இவங்கள அடிக்காமல், ரொம்ப சாதாரணமான முறையில், நார்மலான ஒரு எதிர்ப்பை காட்டி இருக்கிறார் அந்த பெண்.

முதல்முறையாக, இப்படி நாகராஜ் ஒரு பெண்ணை உரிமையாக கட்டிப்பிடிக்க வாய்ப்பில்லை. இந்த வீடியோவை பார்த்தாலும் அப்படி தெரியவில்லை. அதேபோல, திரும்ப திரும்ப இந்த பெண் சொல்லும் ஒரே விஷயம் போட்டோ வேண்டாம் என்பதுதான். அப்படியானால் இதுபோன்ற கேடுகெட்ட செயல்கள் இதற்கு முன்பும் நடந்திருக்குமா என தெரியவில்லை.

93262fed4764c8a39ebbc6c3e31061e9.jpg

ஒருவரது தனிப்பட்ட உரிமையில், ஆசாபாசங்களில் தலையிட யாருக்குமே உரிமை இல்லைதான். ஆனால் சம்பவம் ஒரு அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது.. சம்பவத்தை அரங்கேற்றியது அதிகாரி மிஸ்டர் நாகராஜ்.. உடன்பட்டது அரசு ஊழியர்.. சில்மிஷம் நடந்தது ஒரு பெண்ணிடம்!

47e8faa519895ceef597afc18afd1cdb.jpg

இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ உண்மையாக இருக்கும்பட்சத்தில், சம்பமும் உண்மையாக இருக்கும்பட்சத்தில், போலீஸ் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.

2bf18a1bcab7f752b0b70cfbe48c6df2.jpg


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *