“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்!

மும்பை: லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என கூகுளைப் பார்த்து கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகை கியாரா அத்வானி.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது மனைவி சாக் ஷி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்துள்ளார்.

இதுதவிர ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா இந்தி ரீமேக்கில் அக் ஷய்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். சிவகார்த்திக்கேயன் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் கியாரா நடித்திருந்தார்.

அக்காட்சி ஒளிபரப்பான போது, அதனை குடும்பத்தோடு அமர்ந்து பார்த்ததாக அவர் அளித்த பேட்டி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், அக்காட்சியில் நடித்த அனுபவம் தொடர்பாக பேட்டி ஒன்றில், அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். கருவியின் மூலம் சுய இன்பம் அனுபவிப்பது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். நான் நகைப்புக்குரியவராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் என கியாரா தெரிவித்துள்ளார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தை கரண் ஜோஹர், ழோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பாக கியாராவின் சுய இன்பக் காட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Kiara Advani revealed that she was extremely nervous the night before she had to shoot the vibrator scene in Karan Johars lust stories.

READ  விஸ்வாசம் vs பிகில்! ட்விட்டர் நிறுவனம் நடத்திய பிரம்மாண்ட Poll ரிசல்ட்