மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல்! ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ!

தற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கொச்சை படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டிருந்தார் அந்த ராஜன் செல்லப்பா. அதிகாரம் இல்லையென்று சொன்ன தலைமையிடத்தில் இருந்து தனது மகனுக்கு மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் பெற்றார், தன்னுடன் தனக்கு எடுபிடிகளாக இருக்கும் ஆட்களுக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் ஆகிய பதவிகளை பெற்றார்.

இன்றைக்கு தலைமையையும், கட்சியையும் குறை சொல்லும் ராஜன் செல்லப்பா அவர்கள் மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் காலத்தில் மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்து தற்போது வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தன்னுடைய மகனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர். அதை தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு நம் கைக்கு எட்டிய தூரம் இருந்தும் ராஜன் செல்லப்பாவின் சுயநலத்திற்காக வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை புறக்கணித்து தனக்கு வேண்டியவர் தான் வேட்பாளராக வர வேண்டும் என்று அவரால் அதிகாரமற்ற தலைமை என்று சொன்னவர்களிடத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற வேட்பாளரை பெற்று வாங்கினார்.

அந்த தேர்தல் களத்தில் மாவட்ட கழக செயலாளர் என்ற முறையில் ராஜன் செல்லப்பா அவர்கள் தொகுதியில் எங்காவது வாக்கு கேட்டு சென்று இருந்தாரா? இந்த தொகுதியில் எந்த ஒரு செல்வாக்கும் இல்லாமல் இருந்த TTV. தினகரன் கட்சிக்கு 32ஆயிரம் வாக்குகள் பெற இவருடைய செயல்பாடே காரணம்,உதாரணத்திற்கு திருநகரில் அம்மா படிப்பகம் எனும் அலுவலகம் இவர் வாடகை கொடுத்து நடத்தி வருகிறார்.அந்த அலுவலகம் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் TTV. தினகரன் கட்சி அலுவலகமாக செயல்பட்டதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

ஆனால் இப்படிப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு மதுரை நாடாளுமன்றம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலின் தோல்விக்கு கட்சி நிர்வாகிகளை சரியாக வழிநடத்த தவறியது தலைமை என்று தாண்டுன்டி தனமாக பேசுவது ராஜன் செல்லப்பாவின் சுயநல விளம்பரத்திற்காக. இந்த நிலையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வெற்றி வாய்ப்பு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

கட்சி நிர்வாகிகளை மதித்து பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் மதுரை நாடாளுமன்றமும், திருப்பரங்குன்றம் சட்டமன்றமும் வெற்றி பெற்று இருக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற இவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் இந்த தொகுதியில் இருக்கும் கழக அமைப்பு செயலாளர் திரு ம. முத்துராமலிங்கம் EX.MLA அவர்களை ராஜன் செல்லப்பா அவர்களால் விளம்பரப்படுத்தும் விளம்பரத்திலோ, கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைக்கவோ இல்லை என்ற நிலையில் இதுபோன்ற காழ்ப்புணர்ச்சியோடையே ராஜன் செல்லப்பாவின் செயல்பாடு மதுரை மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகளுக்கும் நன்கு புரிகிறது.

இதை உணர்ந்த ராஜன் செல்லப்பா தன் செயலை நியாயப்படுத்தி கொள்ள தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார். இவர் நல்ல அரசியல்வாதியாக இருந்தால் மதுரை நாடாளுமன்றம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தோல்விக்கு பொறுப்பேற்று தன் கட்சி பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *