எவனெவனோ கூப்பிடுறான் – மீண்டும் வீடியோவில் சிக்கிய நடிகை நிலானி – Nilani

சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி நடிகை நிலானி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை காதலித்தவர் தான் மிரட்டல் விடுப்பதாக அவர் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகையான நிலானி என்பவருக்கும், உதவி இயக்குநர் காந்திக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட காந்தி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற நிலானி புகார் மனு ஒன்றை அளித்துள்ளர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு என்னை பற்றி பரபரப்பான செய்திகள் வெளியான நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது.

அப்போது பலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். தனக்கு திருமணம் ஆக வில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இதற்கு நானும் சம்மதித்தேன். இதன் பின்னர் அடிக்கடி போனில் பேசினோம். நேரிலும் சந்தித்தோம். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இதையடுத்து நான் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதன் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று மிரட்டுகிறார். நான் சொல்வது போல் கேட்காவிட்டால் உனது ஆபாச படங்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுவரை 10 ஆயிரம் செல்போன்களில் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசும் போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிலானி காதல் விவகாரத்தால் தான் பிரச்சனையில் சிக்கினார். இந்நிலையில் மீண்டும் ஒருவரை காதலித்து அந்த நபரால் தன் உயிருக்கு ஆபத்து என்று புகார் அளித்துள்ளார். 2 குழந்தைகளுக்கு தாயான ஒருவர் இப்படியா ஜாக்கிரதையாக இல்லாமல் அடிக்கடி காதலிப்பது என்று விமர்சிக்கப்படுகிறது.