மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார்.. அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோரால் பரபரப்பு!

நாமக்கல்: மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி அரசுப் பள்ளியில் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லை அடுத்த பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் சில சமூக விரோதிகள் திடுதிப்பென்று உள்ளே புகுந்ததாகவும், பள்ளியின் கழிவறைக்குள் மாணவிகளின் ஆடைகளை கிழித்து ஆபாசமாக படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தினால் அலறி அடித்து கொண்டு ஓடிய மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கதறி முறையிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியின் முன்பு திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை கைது செய்ய கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் பள்ளிபாளையம் பகுதியில் அதிர்ச்சி கலந்த பரபரப்பு சூழ்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*