ஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி! பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்!

சென்னை: பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி எடுத்த தனது மனைவி, மகளை, பொது இடத்தில் திட்டிய நபரால் பரபரப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியை, நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு காரணம், கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையும், தற்போதைய அரசியல் பிரச்சனைகளும் தான். சமீபத்தில நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியும் அடைந்தார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் சென்றிருந்தார். அங்கே, ஒரு ஓட்டலில் தங்கியிருந்த பிரகாஷ் ராஜை செல்ஃபி எடுக்கலாமா, என பெண் ஒருவர் கேட்டுள்ளார். அந்த பெண், அவரது மகள், பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி எடுக்க தயாரானபோது, திடீரென அங்கே வந்த அப்பெண்ணின் கணவர், இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், செல்ஃபியை உடனே ஃபோனில் இருந்து டெலிட் செய்யவும் அவர் கண்டித்துள்ளார். காரணம், பிரகாஷ் ராஜ் மோடியை கண்டித்து பேசுவதால், அவருடன் செல்ஃபி எடுப்பது தவறு என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். இதனால், அந்த பெண், அவரது மகள் அங்கேயே அழுதிருக்கிறார்கள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளானார் பிரகாஷ் ராஜ், சம்பந்தப்பட்ட நபரை தனியே அழைத்து, ”என்னையும், மோடியையும் முன்வைத்தா நீங்கள் திருமணம் செய்தீர்கள். பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தப்பு,” என்று கூறியுள்ளார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டாராம். ஆனால், இந்த சம்பவம் பற்றி பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது மிகவும் வித்தியாசமான சம்பவமாக உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

READ  தெரியாமல் கூட இந்த 6 ராசி பெண்களையும் லவ் பண்ணிடாதீங்க!