தர்பார் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பேரனுடன் ரஜினி: வைரலாகும் போட்டோஸ்!

தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் பேரனுடன் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத், தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

மேலும், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒரு கதாபாத்திரம் மும்பையை மிரட்டும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு வேடம் பாட்சா போன்று தாதாவாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று படக்குழுஅறிவிந்திருந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த், தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மகன் தேவ் கிருஷ்ணாவை தூக்கிக் கொண்டு வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
Rajini Sir with his grandson – the only candid pics on my i phone 🤗 they were watching the monitor 😃 pic.twitter.com/XMyWV4Uh6R
— SantoshSivanASC. ISC (@santoshsivan) June 8, 2019

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என் ஐபோனில் உள்ள கேன்டிட் புகைப்படங்கள் இவை மட்டுமே என்று கூறி தாத்தாவையும், பேரனையும் எடுத்த புகைப்படங்களை  அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

#MyWorld #Lifelines ❤️❤️❤️ my darling appa and ved papa 🤗🤗🤗 #AtDarbarShoot pic.twitter.com/V6K1hf98tq
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 8, 2019

மேலும், இந்த ட்விட்டை பார்த்த ரஜினியின் மகள்  சௌந்தர்யா, “என்னுடைய உலகம் அப்பாவும், மகனும் தான்” என்று அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து தனது ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *