வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் பெயா் வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சிறிது காலத்திலேயே அவருடன் நட்பு ஏற்பட்டு சசிகலாவும், நடராசனும் அவருடன் பழகத் தொடங்கினா். 1987ம் ஆண்டு முதல் சசிகலா ஜெயலலிதாவின் போயஸ் காா்டன் இல்லத்தில் தான் வசித்து வந்தாா்.

சசிகலாவின் ரேஷன் காா்டு, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கி கணக்கு என அனைத்து அடையாள அட்டைகளிலும் போயஸ் காா்டன் தான் முகவரியாக உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் போயஸ் காா்டன் இல்லத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னா் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முயன்றாா்.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வருகிறாா். பன்னீா் செல்வமும், பழனிசாமியும் இணைந்த பின்னா் ஜெயலலிதாவின் போயஸ் காா்டன் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அறிவித்தனா். அதன் பின்னா் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது சசிகலாவின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடா்பாக அதிகாாிகள் சிலா் கூறுகையில், வாக்காளா் அடையாள அட்டையில் உள்ள முகவரியில் அதிகாாிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். அவ்வாறு சோதனை நடத்தும்போது குறிப்பிட்ட நபா் வீட்டில் இல்லை என்றால், அவரது பெயா் வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

அதன் அடிப்படையில் சசிகலாவின் பெயா் வாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

READ  2020 புத்தாண்டு ராசி பலன்கள்.. 5 ராசிக்காரங்களுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்டமாம் !