`படுக்கை அறையில் இருந்த நாகப்பாம்பு!’- அலறி ஓடிய சிறுவர்கள்

கடலூர் அடுத்த சோனாங்குப்பம் பகுதியில் பிச்சாண்டி என்பவரின் வீட்டின் படுக்கை அறையில் சிறுவர்கள் உறங்கியபோது தலையை நீட்டிய நாகப்பாம்பைக் கண்டு அலறியடித்துப் பயந்த சிறுவர்கள்.

கடலூர் அடுத்த சோனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. நேற்று மாலை இவரது வீட்டில் சிறுவர்கள்
கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்பொழுது பெட்ஷிட் அடியில் ஏதோ நெளிவதுபோல் உணர்ந்து பார்த்துள்ளனர். உடன் பார்த்தபோது அது பாம்பாக இருந்ததால் அலறியடித்து எழுந்த சிறுவர்கள் பிச்சாண்டியிடம் கூறியுள்ளனர். அவர் சென்று பார்த்தபோது பாம்பு பெட் ஷிட்டிற்கு அடியில் இருந்து தலையை நீட்டியுள்ளது.

இதையடுத்து, பாம்பு பிடிக்கும் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த செல்லா, சுமார் 3 அடி நீளமுள்ள
நாகப் பாம்பை பத்திரமாகக் காயம் இல்லாமல் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தார். கடும் வெயில் இருப்பதால்
பாம்புகள் குளிர்ந்த இடம் மற்றும் உணவு தேடி வீடுகளுக்கு வர வாய்ப்புள்ளதால் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை
எப்பொழுதும் முடிவைக்க வேண்டும் எனப் பாம்பு பிடிக்கும் செல்லா கூறுகிறார். வீட்டின் படுக்கையில் நாகப்பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*