இதுதான் கடைசி நொடி.. தாய்க்கும் தெரியாது.. அந்த மகளுக்கும் தெரியாது.. உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!

சேலம்: “இதுதான் கடைசி நொடி..” என்ற அந்த தாய்க்கும் தெரியாது, அவரது மகளுக்கும் தெரியாது. மகள் கண்முன்னே லாரி மோதி தாய் இறந்ததை பார்த்து கதறினாள் மகள்.. இது சம்பந்தமான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்து வருகிறது. சேலம் அருகே தாரமங்கலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டி அகல்யா ராணி. அங்குள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வருகிறார். இவரது கணவர் எபனேசர் ஜெய்சன் திருநெல்வேலியில் அல்வா கடை வைத்துள்ளார். தனது 12 வயது மகள் கிரேவியுடன் வசித்து வருகிறார். தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகள் 7-ம் வகுப்பு படிக்கிறாள். நேற்று மாலை கிறிஸ்டி தன் மகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
தாரமங்கலம் பிரதான சாலையில் இருவரும் நடந்து வந்தனர். லாரி கிறிஸ்டி அந்த சமயம், வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி, கிறிஸ்டி மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். ஆனால் அந்த லாரியானது, கிறிஸ்டி மீது ஏறி இறங்கியது. இதில் லாரியின் சக்கரங்களுக்கு நடுவே மிக கொடூரமாக டீச்சர் சிக்கி கொண்டார். கொடுமை துடிதுடித்தார் இந்த கொடுமை அனைத்துமே மகள் கன்முன்னாடியே நடந்து. 12 வயது குழந்தை அலறி துடித்து அலறினாள். மகள் வெடித்து கதற, அங்கேயே துடிதுடித்து தாய் உயிரிழந்தார். ஆனால் அந்த லாரி டிரைவரோ, விபத்தை ஏற்படுத்தியதுடன், வண்டியை நிற்காமல் வேகமாக ஓட்டி சென்றுவிட்டார். தாரமங்கலம் விசாரணை இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இயங்கிவரும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதன்படி சம்பந்தப்பட்ட லாரியை பிடித்துவிட்டனர். சட்டவிரோதமாக லாரியில் செம்மண் அள்ளிக் கொண்டு போயுள்ளார் டிரைவர் கிருஷ்ணன். போலீஸ் வலை வீடியோ வைரல் அவரை போலீசார் வலை வீசி தேடி வருவதுடன், விபத்து நடந்த வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளனர். மகளின் கண்முன்னே தாய் இறந்த இந்த வீடியோ காட்சி பார்ப்போர் மனதை பதைபதைக்க செய்து வருகிறது.