பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள முதல் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது விஜய் டிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், ஜூன் 23-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகை மதுமிதா கலந்து கொள்ள இருப்பதும் உறுதியானது.

இந்நிலையில் தற்போது பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில் இம்முறையும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பாடகர் மோகன் வைத்யா, அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் மற்ற போட்டியாளர்களின் பட்டியலை டிவி நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ பார்க்க: எதிரும் புதிருமாய் வசனங்களால் சீண்டிய தல VS தளபதி!