ட்விட்டர் ட்ரெண்டிங்கில் Me – Vijay! அப்படின்னா?

விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் Me – Vijay என்று  பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் நெட்டிசன்கள் நேசமணி என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர்.அதேபோல், இன்று Me – Vijay என்பதை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
வீட்டில் இருப்பவர்கள் யாருடைய ரசிகர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ‘Me – Vijay’ இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் அப்பா, அம்மா, குழந்தைகள் என 4 பேர் இருந்தால் அதில் யார் யார், யாருடைய ரசிகர்கள் என்ற பதிலை பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் நடிகர் விஜய்யின் பெயரை பதிவிட்டுள்ளனர். இதையடுத்து ‘Me – Vijay’ இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *