இந்திய ரசிகர்களை கண்டித்த விராத்கோஹ்லி: ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது அநாகரீகமாக நடந்து கொண்ட இந்திய ரசிகர்களை மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி கண்டித்தார். நேற்றைய போட்டியின்போது விராத்கோஹ்லி அபாரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவருடைய பேட்டிங்கை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அவ்வப்போது ஃபீல்டிங்கை மாற்றி கொண்டிருந்தார். அவ்வாறு ஒருமுறை ஃபீல்டிங் மாற்றம் செய்து கொண்டிருந்தபோது எல்லைக்கோட்டிற்கு அருகே இருந்த இந்திய ரசிகர்கள் சிலர் ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்து அவருக்கு எதிராக கூச்சல் போட்டனர்.

இதனால் ஸ்மித் அதிர்ச்சி அடைந்தார். இதனை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த விராத் கோஹ்லி, உடனே இந்திய ரசிகர்களை நோக்கி ஸ்டீவ் ஸ்மித்தை கேலி செய்ய வேண்டாம் என்று கண்டித்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கும் சேர்த்து கைதட்டுங்கள்’ என்று சைகை மூலம் கூறினார். விராத் கோஹ்லியின் இந்த விசாலமான மனதிற்கு உலக கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித்தும் விராத் கோஹ்லியின் முதுகில் தட்டி கொடுத்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது With India fans giving Steve Smith a tough time fielding in the deep, @imVkohli suggested they applaud the Australian instead.Absolute class


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *