பிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது!


பெங்களூர்: பிக்பாஸ் இல்லத்தில் என்ன நடக்கும்..? சொந்த வீட்டுக்கு செல்ல முடியாது, அங்கேயே உடல்பயிற்சி செய்து, அங்கேயே குளித்து, அங்கேயே சாப்பிட்டு, இரவு அங்கேயே தூங்குவார்கள். இப்போது கர்நாடக சட்டசபையும் அப்படித்தான் மாறியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்கள் எண்ணிக்கையாவது கம்மி. ஆனால், கர்நாடக சட்டசபையை பிக் பாஸ் ஹவுஸ் போல மாற்றியோர் எண்ணிக்கை 105. ஆம்.. எடியூரப்பாவையும் சேர்த்து, 105 பேர் கர்நாடக சட்டசபையில் தங்கியிருந்து அதை பிக்பாஸ் இல்லமாக மாற்றியுள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் தூக்கம் கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாமல், அவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
n இதனால் கோபமடைந்த பாஜக எம்எல்ஏக்கள், சட்டசபையிலேயே தங்கும் முடிவுக்கு வந்தனர். எடியூரப்பா தலைமையில், சட்டசபைக்குள்ளேயே சாப்பிட்டு, பாய் விரித்து படுத்து தூங்கினர். இன்று காலை விதானசவுதா வளாகத்தில் வாக்கிங் சென்றனர். டிபனும் அங்கேயே சாப்பிட்டனர்.
n Karnataka crisis: Yeddyurappa, other BJP MLAs dine, sleep inside Vidhana Soudha
n Read story |
n
n ANI Digital (@ani_digital)
n விருந்தினர் ஸ்பெஷல் விருந்தினர் நேற்று இரவு சாப்பாட்டின்போது எடியூரப்பாவுடன் தீவிரமாக அவர்கள் ஆலோசனை நடத்தியதை பார்க்க முடிந்தது. இன்று காலை 'பிக்பாஸ் வீட்டுக்கு' ஒரு ஸ்பெஷல் விருந்தினர் வந்திருந்தார். கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வர்தான் அவர். இன்மேட்ஸ்களுடன் அமர்ந்து ஹாயாக அவர் டிபன் சாப்பிட்டு சென்றார்.
n
n Karnataka: BJP state president BS Yeddyurappa sleeps at the Vidhana Soudha in Bengaluru. BJP legislators of the state are on an over night ‘dharna’ at the Assembly over their demand of floor test.
n ANI (@ANI)
n சபாநாயகர் பிக் பாஸ் சபாநாயகர் பிக்பாஸ் ஹவுசில் என்னென்ன வசதி உண்டோ அத்தனையும், இங்கும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. சட்டசபை வளாகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் முழு, மருத்துவ உபகரணங்களுடன் ரெடியாக நிறுத்தப்பட்டது. அவசர தேவைக்காக டாக்டர்களும் பணியில் இருந்தனர். இன்மேட்ஸ்சுக்கு சாப்பாடு தர வேண்டியது பிக் பாஸ் கடமை அல்லவா. அதேபோலத்தான், இங்கும். சட்டசபையின் பிக் பாஸ் சபாநாயகர் அல்லவா. அவர் உத்தரவின்பேரில், தங்கியிருந்த அனைவருக்கும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.
n Bengaluru: BJP legislators on an over night ‘dharna’ at the Vidhana Soudha over their demand of floor test. Karnataka Governor Vajubhai Vala has written to CM HD Kumaraswamy, asking him to prove majority of the government on the floor of the House by 1:30 pm tomorrow.
n ANI (@ANI)
n வெளியேற்றம் உண்டா எலிமினேஷன் காலை எழுந்ததும் வேக் அப் சாங் போடுவது பிக் பாஸ் வீட்டின் வழக்கம். ஆனால் அது மட்டும் இங்கு மிஸ்சிங். ஆனால், காலை வாக்கிங், உடற்பயிற்சி இதெல்லாம் பிக் பாஸ் வீடு மாதிரியே அரங்கேறியது. ஒருவேளை இன்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாவிட்டால், பிக்பாஸ் ஹவுசில் இந்த வாரம் 'எலிமினேஷன்' இருக்காது. அடுத்து திங்கள்கிழமைதான் சட்டசபை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
n Bengaluru: BJP legislators on an over night ‘dharna’ at the Vidhana Soudha over their demand of floor test
n ANI (@ANI)
n


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *