பிக்பாஸ் வீட்டில் இரவில் இப்படித்தான் நடக்குதா? வெளியே வந்ததும் உண்மையை உடைத்த வனிதா!


பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசனே தொகுத்து வழங்கிவருகிறார். இந்த முறை 16 பிரபலங்கள் போட்டியாளர்களா கலந்துகொண்டார். இதில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவது, கத்துவது என விஜய் தொலைக்காட்சியின் TRP யை எகிற வைத்தார் வனிதா. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த வனிதா யு-டியுப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார்.
n அதில் 'பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள். ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்' என்ற ரகசியத்தை கூறியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *