எடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து!


பெங்களூரு: கர்நாடகா சட்டசபையையே கூவத்தூர் சொகுசு விடுதி போல மாற்றி கூத்தடித்துள்ளனர் பாஜக எம்.எல்.ஏக்கள். அதுவும் காலையில் எழுந்து 'தங்க தமிழ்ச்செல்வன்' ஸ்டைலில் பாஜக எம்.எல்.ஏக்கள் அங்கேயே வாக்கிங் போய் காலை டிபன் சாப்பிட்டு அதகளப்படுத்தியுள்ளனர். கர்நாடகா அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமி இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஆளுநர் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி தரப்பு முறையிட இருக்கிறது. இதனால் கர்நாடகா அரசியலில் அடுத்த கட்டம் புதிராக உள்ளது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினர்.
n அங்கேயே சாப்பிட்டு உறங்கினர். காலையில் எழுந்ததும் சொகுசு விடுதியில் இருப்பதை போல சட்டசபை வளாகத்திலேயே தொப்பையுடன் வாக்கிங் உலா வந்தனர். அதாவது சசிகலா ஏற்பாடு செய்த கூவத்தூரில் எத்தனை கூத்துகள் நடந்ததோ அத்தனையையும் கர்நாடகா சட்டசபைக்குள் நடத்தினர் பாஜக எம்.எல்.ஏக்கள். கூவத்தூரில் தங்க தமிழ்ச்செல்வன் தினமும் காலையில் எழுந்து வாக்கிங் போய்விட்டு செய்தியாளர்களை சந்திப்பார். அதே காட்சிகளை நினைவுபடுத்தியது பாஜக எம்.எல்.ஏக்களின் நடவடிக்கைகள்:
n
n Bengaluru: K’taka BJP legislators go for a morning walk. They were on an over night ‘dharna’ at Vidhana Soudha over their demand of floor test. Karnataka Guv Vajubhai Vala has written to the CM,asking him to prove majority of the govt on floor of the House by 1:30 pm today
n ANI (@ANI)
n


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *