இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன்! மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அப்போதுரோந்துப் பணியில் இருந்த வனக்காப்பாளர் ஒருவரும், ரோந்து காவலரும் அங்கு சென்றபோது அங்கிருந்து 3 பேர் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த அவர்கள், காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் கரை சோதனை செய்தனர்.

அப்போது காரில் சாக்குப் மூட்டை ஒன்று இருந்துள்ளது. அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த சாக்கு மூட்டைக்குள் தலையில் வெட்டுக்காயங்களுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது.

அந்த சடலத்தின் சட்டைபையில் நெய்வேலி என்.எல்.சி பணியாளருக்கான அடையாள அட்டை இருந்தது. இதனையடுத்து கொலை செய்யப்பட்டவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் நெல்லிக்கனி தெருவைச் சேர்ந்த என்.எல்.சி. அதிகாரியான பழனிவேல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனி வேலின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பழனிவேலின் மனைவி மஞ்சுளா எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கணவர் வெளியில் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் அவரிடம் கணவர் கொல்லப்பட்டதை தெரிவித்துள்ளனர் ஆனாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்துள்ளது. மேலும் அவரது வீட்டின் சுவற்றில் ரத்த துளிகள் இருந்துள்ளது. இதனையடுத்து மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது பழனிவேல் கொலைக்காண மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிகமாக ஊதியம் வாங்கும் பழனிவேலு வீட்டிற்கு அதிகம் செலவு செய்யாமல் சிக்கனமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, இரு இளம் பெண்களுடன் உல்லாசமாக தெரிந்ததாக கூறப்படுகின்றது. இதனையறிந்த அவரது மூத்த மகள் வீட்டை விட்டு சென்று காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். வீட்டுச்செலவுக்கு பணம் கேட்டால் மனைவியை பழனிவேலு அடிப்பார் என கூறப்படுகிறது.

மனைவியை வெளியே அழைத்து செல்ல மறுத்த பழனிவேல் தனது காதலிகளுடன் காரில் உல்லாசமாக வலம்வந்துள்ளார். இதனை தட்டிகேட்ட மனைவியின் தம்பியை திட்டி வீட்டிற்கு வராதபடி செய்துள்ளார்.கணவனின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்ததால் தனது தம்பியுடன் சேர்ந்து பழனிவேலுவை கொடூரமாக கொலை செய்ததாகவும், வீடு முழுவதும் சிதறிய ரத்தத்தை மறைக்க தண்ணீர் விட்டு கழுவியதும் விசாரணையில் தெரிந்தது. மேலும் சடலத்தை மூட்டையாக கட்டி தீவைத்துக் கொண்டிருந்தபோது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலைவழக்கில் மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். அவரது தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *