TNPL இன்றைய போட்டிகளில் மோதப்போவது யார்? எப்படி நேரலையில் பார்க்கலாம்?


TNPL போட்டிகள் கோலாகலமாக நேற்று தொடங்கிய நிலையில் , இன்று TNPL ல் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன . மாலை 3:15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி , பாபா இந்திரஜித் தலைமையிலான ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரவு 7:15 மணிக்கு தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தலைமையிலான TUTI பேட்ரியோட்ஸ் அணி, ரோஹித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளவையுள்ளது . முன்னதாக நேற்று நடந்த TNPL தொடரின் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் கௌசிக் காந்தி தலைமையிலான சேபாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதியது .
n இந்த போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்க்கலாம். மேலும் நேரடி ஒளிபரப்பினை ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம்.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *