விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல இளம் சீரியல்நடிகர்.! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!


தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்நிலையில் ஹிந்தியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் ஷிவ்லேக் சிங்க். இவர் சங்கத் மோட்சன் ஹனுமன், சசுரால் ஸிமர் கா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் .மேலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து வந்துள்ளார். இந்நிலையில் ஷிவ்லெக் தனது தந்தை ஷிவேந்திர சிங், தந்தை லேக்னா சிங் மற்றும் நவீன் சிங் அகியோஐடன் ராய்ப்பூரில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது பிலாஸ்பூரில் இருந்து ராய்பூருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் மீது கார் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
n இதில் ஷிவ்லேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .மேலும் மற்றவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவரது மறைவிற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *