அபிநந்தன் பிடிபட காரணமாக இருந்த பாக்.ராணுவ அதிகாரி பலி! எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி

டில்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட காரணமாக இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் இந்திய வீரர்களால் எல்லைப் பகுதியில் சுட்டுக்கொல்லப் பட்டார். காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக எல்லைப்பகுதியில் இந்திய ராணுவத் தின் மீது தாக்குதல் நடத்தியபோது, இந்திய வீரர்களின் பதிலடியில் அவர் கொல்லப்பட்ட தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலின்போது, பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய ஐஏஎப் வீரர் அபிநந்தன், காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய நிலையில், அரை அடையாளம் கண்டு பிடித்தது பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவு சுபேதார் அகமது கான் என்று கூறப்பட்டது.
n இவர்தான் அபிநந்தனை பிடித்துச் சென்று முகாமில் ஒப்படைத்து டார்ச்சர் செய்யதாக கூறப்பட்டது. அப்போது வெளியான புகைப்படங்களிலும் சுபேதார் அகமதுகான் படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ வைக்க அகமதுகான் உதவியுள்ளார். அப்போது இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் அகமது கான் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *