`கோலி விளையாட்டா?’ – இப்படி அலட்சியப்படுத்தும் பெற்றோரின் கவனத்துக்கு! #MyVikatan

ஐயோ… ஒரு பையனையே சமாளிக்க முடியலை. அந்தக் காலத்துல எப்படித்தான் நாலு ஐந்து பிள்ளைகளைப் பெத்து வளர்த்தாங்களோ.. வாலு தொல்லை தாங்கலே", `பொண்ணு சூப்பர் ஹைபரா இருக்கிறா என்ன பண்றது?' என குடும்பத் தலைவிகள் அங்கலாய்ப்பது காதில் விழுகிறது.“ வாண்டுகளை வெளியேயும் அனுப்ப முடியலே! வீட்லே இருந்தா, எதையாவது உடைச்சுப் போடுதுங்க. இல்ல, செல்போன்ல, கம்ப்யூட்டர்ல, ஒக்காந்துகிட்டு அழிச்சாட்டியம் பண்ணுதுங்க.. இப்படி செல்போன்லயும் கம்ப்யூட்டர்லயும், நாள்பூரா இருந்தா, சோடா பாட்டில் கண்ணாடி போடவேண்டியதுதான். இதையெல்லாம் வீட்டு மனுசன் எங்க கவனிக்கிறாரு"ன்னு புலம்புவதும் புரிகிறது.Representational Image அதனால, வாண்டுகளை வெளியே விளையாட விடுங்கள்.
n நமது முந்தைய ஆட்டங்களான கோலியை விளையாடட்டுமே! சே, கோலி விளையாட்டா? என அலட்சியப்படுத்தாதீர்கள். கண்ணாடி கோலிக்குண்டுகள் விளையாடுவது ஒரு மிகச் சிறந்த பயிற்சியாகும். இதை விளையாடினால், கண்கள் துல்லியமாகப் பார்க்க இயலும். குறிபார்த்து இலக்கை எய்யும் திறனும் வாய்க்கும். இந்த விளையாட்டை ஒரு மரத்தடியில் விளையாடினால், நிழலும் பாதுகாப்பாய் இருக்கும்.இந்த விளையாட்டில் உங்கள் பையன் தேர்ச்சி பெற்றுவிட்டால், அம்பு எய்தல், துப்பாக்கிச் சூடு போட்டிகளில் சுலபமாக வெற்றி பெறுவானே! அடுத்து, கிட்டிப்புள் விளையாட்டு. என்னது, கிட்டிப் புள்ளா? இந்த கிட்டிப்புள் விளையாட்டின் அடிப்படைதான் இன்றைய கிரிக்கெட் விளையாட்டு என்பது உங்களுக்கு தெரியாதா?ஒரு சின்ன மரக்குச்சி, அதை இன்னொரு மரக்குச்சியால், ஒரு சிறிய குழியில் வைத்துத் தள்ளிவிட வேண்டும். அதற்குப் பிறகு, சின்ன மரக்குச்சியின் பக்கவான்டு கூர்மையான பகுதியில் பெரிய மரக்குச்சியால் தட்டினால் பறக்கும். அதைக் கீழே விழாமல் தடுத்து, வெகுதூரம் பறக்கும்படி செய்ய வேண்டும். இதையே, இன்று ஒரு மைதானத்தில் கிரிக்கெட்டாக பந்தை வைத்து விளையாடுகிறார்கள்.Representational Image இந்த விளையாட்டை பிள்ளைகள் ஒழுங்காகக் கற்றுக் கொண்டால், எதிர் காலத்தில் கிரிக்கெட் பிளேயராக வரலாம். அப்படி இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். வளர்ந்து பெரியவன் ஆனதும், அவன் மனைவி கோபத்தில் வீசியெறியும் பூரிக்கட்டை, தலையணை இத்யாதி பொருள்களை லாகவமாகத் தடுத்துவிடலாம்தானே. வீட்டில், பழைய நோட்டுப் புத்தக காகிதத்தில் பட்டம் ஒன்று செய்து கொள்ள அனுமதி தாருங்கள். அவற்றை திறந்த வெளியில் பறக்கவிட்டு வேடிக்கை பார்க்கட்டும். பட்டம் விடுவது ஒரு போட்டியாகவே சில பகுதிகளில் நடைபெறுகிறது. இது விபத்தைக்கூட உருவாக்கிவிடும். ஏனென்றால், அதைப் பயன்படுத்தும் நூலில் கண்ணாடித் துண்டுகள், பசையை சேர்த்துத் தடவிவிடுவார்கள். அவை, நம் கழுத்தை அறுத்துவிடும். பிள்ளைகளுக்கு சாதாரண நூல் கண்டே போதுமானதாகும்.பட்டம் விடுவதால், குழந்தைகள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் வாய்ப்பும், பட்டம் காற்றில் அல்லாடும்போது, அதை லாகவமாகக் கையாளும் திறமையும் கைகூடும். இது, வாழ்க்கைக்கும் உதவும் அல்லவா?பெண் குழந்தைகள் நொண்டியடித்தல் விளையாட்டு எவ்வளவு வித்தியாசமானது. குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தன்னுடைய உடலை தன் கட்டுக்குள் வைக்கும் உத்திதான் இது. இதை விளையாட்டாக விளையாடச் சொன்னார்கள்.Representational Image பல்லாங்குழி விளையாட்டு. இது, ஒரு அற்புதமான கணிதவியல் விளையாட்டு. எப்படி சதுரங்க விளையாட்டில் யோசித்து செயல்படுகிறோமோ அப்படி நன்கு சிந்தித்து விளையாடும் விளையாட்டு இது.என்ன, வாண்டுகளை விளையாட வெளியே அனுப்பிட்டு எட்டி எட்டிப் பாக்குறீங்களா, இதோ வந்துட்டாங்க.. உள்ள கூட்டிக்கிட்டு போங்க. உடம்பெல்லாம் புழுதி. கவலைப்படாதீங்க. கறை படிவது நல்லது. விளம்பரத்திற்கு மட்டுமல்ல. குழந்தைகளுக்கும்தான். மற்ற பிள்ளைகளோடு கறைபடிந்து விளையாடினால், மனத்திலுள்ள பொறாமை, கோபம் போன்ற குணங்கள் காணாமல் போய்விடும்.Representational Image குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள். அதைவிடுத்து, "அபாகஸ் சேக்கறேன், மியூசிக் கிளாஸ் சேக்கறேன்" என குழந்தைகள்மீது உங்களின் ஆசைகளைத் திணிக்காதீர்கள்.குழந்தைகள், குழந்தைகளாக வளரட்டுமே!-கே. அசோகன்My Vikatanவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க… https://www.vikatan.com/special/myvikatan/

READ  சீரியல் நடிகை ஆல்யா மானசாவிற்கு நடந்த ஸ்பெஷல் விஷயம்!