தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிகில்! வேறு எந்த படத்திற்கும் கொடுக்காததை கொடுத்த விஜய்!

தமிழில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படம். நடிகர் விஜய், இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் விஜயின் 63ஆவது திரைப்படமாகும். இதுவரை நடிகர் விஜய் 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்தது கிடையாது. ஆனால் பிகில் திரைப்படத்திற்கு அவர் அதிகமான எண்ணிக்கையில் கால்ஷீட் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் செலவிடாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என்று திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
n இயக்குனர் அட்லி இயக்கும் இந்த திரைப்படத்தை கல்பாத்தி அகோரம் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான், இப்படத்திற்கு இசையமைக்கிறார். விளையாட்டை மையமாக எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , தீபாவளி அன்று வெளியிடப்படும் என்று திரைப்படக்குழுவினர் முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இந்த திரைப்படமானது தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே திரையிடப்படும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *