”வேலை வேண்டுமென்றால் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும்” விரட்டி விரட்டி புரட்டியெடுத்த பெண்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களை படுக்கைக்கு அழைத்தவருக்கு பெண்களே தர்ம அடி கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் திருநெல்வேலி மாவட்டம், கழுகுமலை இளைஞர்கள் பலரிடம் வேலைவாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று அழைக்கழித்து விட்டும் வேலை வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து உள்ளார். சிலரை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இவரது தொல்லைக்கு ஆளான பெண் ஒருவர், தனது தோழியிடம் விவரத்தை கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவர் செல்போனில் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தோழியின் உதவியுடன் அந்த பெண் திருநெல்வேலி மாவட்டம், கழுகுமலையில் உள்ள தனது வீட்டிற்கு அந்த மோசடி பேர் வழியை வரவழைத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்தவரை பெண்கள் தாக்கினர். அடி தாங்க முடியாமல் ஓடியவரை விரட்டி, விரட்டி தாக்கினர். தகவல் அறிந்து சென்ற அந்தபகுதி இளைஞர்களும் அவரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் கழுகுமலை போலீசார் விசாரணை கூட நடத்தாமல் விட்டுவிட்டதாக அப்பகுதி இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Also see… வெளியான மிரட்டல் ஆடியோ… மீராமிதுன் மீது போலீசார் வழக்கு