சேரன் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீளாத ஹவுஸ்மேட்ஸ்.. என்ன நடக்குது பாருங்க!

பிக்பாஸ் வீட்டில் தலைவர் போட்டிக்காக நடக்கும் டாஸ்க்கில் இருந்து வனிதாவும் தர்ஷனும் தானாகவே பின்வாங்குகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த சேரன் நேற்று நாமினேஷன் முறையில் எவிக்ட் செய்யப்பட்டார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியும் கலக்கம் அடைந்தனர். பின்னர் சேரனுக்கு சீக்ரெட் ரூமில் தங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. கேப்டன் தேர்வு இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ இன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் தேர்வுக்கான டாஸ்க் நடைபெறுகிறது.

டாஸ்க் தொடங்கியவுடனே என்னால் இதை தொடர முடியாது என்று கூறி விட்டு விலகுகிறார் வனிதா. இதேபோல் தர்ஷனும் கால் வலிக்கிறது என்று கூறி கேப்டன் டாஸ்க்கில் இருந்து விலகி விடுகிறார்.விட்டுக்கொடுத்த தர்ஷன் இருவரும் விளையாடாமல் விட்டுக்கொடுப்பதால் லாஸ்லியா வெற்றி பெறுவதாக தெரிகிறது. ஆனால் லாஸ்லியா எனக்கு இந்த பதவி வேண்டாம் என்று கூறுகிறார். மேலும் தர்ஷனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ.

நானும் வெளியேறிவிடுவேன் வனிதா நேற்றே சேரன் வெளியேறியதை தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். சேரன் வெளியேறியதால் தன்னால் பிக்பாஸ் வீட்டில் இனி இருக்க முடியாது நானும் அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறினார்.

சேரன் வெளியேறியதால் வனிதாவுக்கு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எங்கு வீட்டின் கேப்டன் ஆனால், நாமினேஷனுக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்று நினைத்து அவர் விலகியதாக தெரிகிறது.

ஆனால் தர்ஷன், இதுவரை கேப்டன் பதவிக்கு வராத லாஸ்லியா இம்முறை கேப்டனாக வேண்டும் என்று விட்டுக்கொடுத்தாரா அல்லது சேரன் வெளியே போனதால் அவரும் இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.


Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *