தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.இப்பட வேலைகளின் லோகேஷ், விஜய்யுடன் இணைந்துள்ள படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.தளபதி 64 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. படத்தில் விஜய் சேதுபதிக்காக படக்குழு நிறைய மாற்றங்கள் செய்துள்ளனராம்.அதாவது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இந்த படத்தில் அவரது காட்சிகளை முதலில் முடித்து மற்ற பட வேலைகளில் அவர் கவனம் செலுத்த உதவியுள்ளனர்.அதோடு இதற்கு முன் அவர் கமிட் செய்த படங்களுக்காக அவரது லுக்கும் மாறாமல் இருக்க மிகவும் கவனமாக தளபதி 64 படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்களாம். விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம்.