இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்தனர்


முறையான பராமரிப்பில்லாமல் பழையதாக இருக்கும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மக்களின் எண்ணம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்தை புறக்கணித்து ரயில் மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால் அரசு எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் திகைத்து போயுள்ளனர்.

கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்து பயணத்துக்கு மாறியிருக்கலாம் .

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?