இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்

மும்பை: நாடு முழுவதும் சுமார் 8,000
பத்திரிகையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளில் இடம்பெறும் செய்தியின்
உண்மைத் தன்மையை பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்ள கூகுள் இந்தியா பயிற்சி நிறுவனம்
சார்பில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி
வழங்கப்பட உள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி கூகுள் நியூஸ்
ஐ. ஐ. டி. என் திட்டத்தின் கீழ் முதலில் 200 பத்திரிகையாளர்களுக்கு கூகுள் பயிற்சி
அளிக்க திட்டமிட்டுள்ளது. செய்தியின் உண்மைத் தன்மை, அது எங்கிருந்து பெறப்பட்டது, ஒரு செய்தி எந்தளவுக்கு
உண்மை, அதில் கூறப்பட்டுள்ள தகவல் ஏற்றுக்கொள்ளக்கூடியதா போன்ற அனைத்துப்
பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதன் பின்னர் அவர்கள்
அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு பயிற்சி
வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சியானது ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, வங்கம், மராத்தி ஆகிய மொழிகளில் வழங்கப்பட
உள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம் தவறான மற்றும் பொய் செய்திகளைப் பதிவிட்டு
பிரச்னையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க முடியும் என்று கூகுள் நிறுவனம்
கூறியுள்ளது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?