இன்றைய கேள்வி

தங்கதமிழ்செல்வன் முடிவு சரியா? தவறா?

குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


குக்கர் சின்னத்தை தமது அணி பயன்படுத்த அனுமதிக்க கோரி, டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், அண்மையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரை ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு அளித்ததால், ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதனால் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தமது அணிக்கு, விருப்பப்பட்ட பெயரை வைக்கவும், குக்கர் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், மனுவில் தினகரன் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பார்லி, தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க  உத்தரவிட்டதுடன் வழக்கை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?