இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏக்கள் 4 பேர் டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு

நெல்லை:மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நெல்லை வந்தார்.

அவர் நேற்று பகலில் நெல்லை மாநகர் மாவட்ட பகுதியில் பல இடங்களில் சென்று மக்கள் மத்தியில் பேசினார்.இரவில் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். டி.டி.வி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 16 பேர் குற்றாலம் சென்று தங்கினர்.

அவர்களுடன் டி.டி.வி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை . அவர்கள் எதிர்கால திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கை வாபஸ் பெறப் போவதாக கூறிய தங்க தமிழ் செல்வனும் அவர்களுடன் பேசி உள்ளார். கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் இன்று டி.டி.வி.தினகரனை திடீர் என்று சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அதன் பின்னர் இன்று காலை டி.டி.வி தினகரன் தென்காசியில் பொறியாளர்அணி செயலாளர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இன்று பிற்பகல் கடையநல்லூர், புளியங்குடி, சிந்தாமணி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய ஊர்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #edappadipalanisamy #dinakaran

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?