கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : பூவிலே வெள்ளைப் பூ; பூமியை நோக்கும் பூ; அது என்ன?


விஜய் டிவி பிக்பாஸ்-2 வை கமலஹாசன் தொகுக்க போகிறாரா .!?

கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக் பாஸ் திமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிக் பாஸ் 2 வையும் கமல் ஹாஸனே தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக இந்தியில் வெற்றிபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி சென்ற ஆண்டு தமிழிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தனது பெரும்பாலான அரசியல் கருத்துகளை அனைவரிடமும் எளிதில் கொண்டு சென்றார்.

தற்போது கமல் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை துவங்கி அதில் தீவிர வேலை செய்து வருகிறார்,

இதனால் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கேள்வி குறியாகவே இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் 2 வையும் கமல் தான் தொகுத்து வழங்குவாராம்.

இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடியவிரைவில் வெளியிடப்படுமாம்.

இதனால் பிக் பாஸ் மூலம் கமல் தனது அரசியல் கருத்துக்களை கூறப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மேலும் இது வார இறுதி நாட்களில் மட்டுமே நிகழ்ச்சிக்கு வர வேண்டியுள்ளதால் கமல் சமாளித்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடிட்சிருந்தா லைக் பண்ணுங்க , உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *