கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : அந்தரத்தில் தொங்குது செம்பும் தண்ணீரும் ?


நிர்மலாதேவி விவகாரத்தில் களத்தில் குதித்த மாதர் சங்கம்..!!

நிர்மலாதேவி விவகாரத்தில், உச்ச நீதி மன்றம் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்…. ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்….நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானத்தின் விசாரணையில் நம்பிக்கை இல்லை, என்று ஜனநாயக மாதர் சங்ம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவியான உ. வாசுகி, நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது, நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக அரசு சிபிசிஐடி. விசாரிக்கும் என்றது.

அதன்படி, உடனே, சிபிசிஐடி இயக்குநர் மாற்றப் பட்டார். இது கவர்னரைக் காப்பாற்றுவதற்காக நடைபெறும் சூழ்ச்சியாகத் தான் தெரிகிறது.இந்த விவகாரத்தில், காமராஜர் பல்கலைக் கழகம் தாண்டி, கவர்னர் வரை விஷயம் பெரிதாகி உள்ளது. சந்தானம், தன்னால் கவர்னரை விசாரிக்க இயலாது, என்று கூறுகிறார். எனவே, இந்த விசாரணை, தற்போது ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே, எங்களது ஜனநாயக மாதர் சங்கம், தமிழக கவர்னரைத் திரும்பப் பெறுமாறு, ஜனாதிபதிக்கு கோரிக்கை எழுப்பி உள்ளோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ். அதிகாரி, சந்தானத்தின் விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை. எனவே, உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில், சிபிஐ, இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும், என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *