இன்றைய கேள்வி

நீங்கள் விரும்பும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

அடுத்த மாதத்தோடு அதிமுகவின் கதை முடிகிறது


அடுத்த மாதத்தோடு அதிமுகவின் கதை முடிகிறது : தயாராகும் சிறை… முதல்வர் முதல் அமைச்சர் வரை யாரும் தப்ப முடியாது!

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீது பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விரைவில் ஊழல் வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றுக்கு வந்திருந்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரும் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் இருவரும் கடந்தகால கசப்புகளை மறந்து பரஸ்பரம் அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது சுப்பிரமணியன் சுவாமி ஸ்டாலினிடம் சில ரகசியங்கள் சொன்னதாக தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக அரசுக்கு எதிராக தனது அதிரடியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக மூத்த அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அவர் தனது நண்பர்தான்
எனவும், சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக சொல்லப்படுகிறது.

மேலும்,அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல்கள் பட்டியல் அடங்கிய ஃபைலை பிரதமரிடம் கொடுத்துள்ளதாகவும்,அவர்கள் மீது ஊழல் வழக்கு தொடுக்க விரைவில் ஆளுநர் அனுமதி கொடுத்துவிடுவார் என அவர் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

விடுகதை

ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?