திரிஷாவுக்கு மட்டும் கிடைத்த சர்வதேச கெளரவம் – Tamil Cinema Latest News


நடிகை திரிஷா 15 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். அது மட்டுமின்றி அவர் பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் நலம் பற்றிய சில அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திரிஷாவுக்கு UNICEF அமைப்பு Celebrity Advocate அந்தஸ்து கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளது. நாளை இந்த அமைப்பு சென்னையில் நடத்தவுள்ள குழந்தைகள் தின விழாவில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

தென்னிந்தியாவில் இந்த கெளரவத்தை பெறும் முதல் நடிகை திரிஷா தான் என்பதால் இதற்கு சமூகவலைத்தளங்களில் திரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*