கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும்தான்?


தமிழ்நாட்டில் தினகரனுடன் காங்கிரஸ் கூட்டணியா?: திருநாவுக்கரசர் பதில்

சென்னை:
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தால்  அக்கட்சியுடன் புதிதாக தேர்தல் கூட்டணி ஏற்படுத்திகொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக, சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், ‘அ.ம.மு.க. செயலாளர் தினகரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், நாங்கள் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இணைந்திருக்கிறோம் ’என பதிலளித்தார்.

இதே கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், ‘தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி பலமாகவும், உயிரிப்புடனும் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வேறு எந்த கூட்டணிக்கும் காங்கிரசில் இடமில்லை என்று கருதுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #TNCongAMMKalliance #TTVDhinakaran #Thirunavukkarasar 

Related Tags :

டிடிவி தினகரன் |
திருநாவுக்கரசர்

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *