கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : ஆகாயதிற்கும் பூமிக்கும் ஒரே சங்கிலி , அது என்ன?


8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில் ஆர்ப்பாட்டம் : டிடிவி தினகரன்

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி.தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில், தினகரன் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக, இயற்கை வளங்களை அழித்தும், விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை வலுகட்டாயமாக அபகரிக்கும் எடப்பாடி அரசை கண்டித்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணியளவில் தர்மபுரி மாவட்டம் அரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும்.

மக்கள் எதிர்ப்பை புறந்தள்ளி ஜனநாயக விரோத வழியில், இத்திட்டத்தை முன்னெடுக்கும் இந்த கொடுஞ்செயலை தடுத்து, விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், மக்கள் சக்தியின் வலிமையும், எடுத்துரைக்கும் விதமாக அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 வழி சாலை திட்டத்தை கண்டித்து அரூரில், தினகரன் 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் : TTV Dhinakaran

https://www.youtube.com/watch?v=lXmcqAjK8rI&feature=youtu.be

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *