தினகரன் துவங்கவிருக்கும் கட்சி பெயர் கட்சி பெயர் என்ன?


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்க்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது அதிமுக. ஜெயலலிதாவின் உயிரித்தோழி சசிகலாவின் தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகின்றன. இதில், எடப்பாடி -ஓபிஎஸ் அணிகள் கட்சியையும் – ஆட்சியையும் கையகப்படுத்தியுள்ள சூழலில், தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என தெரிவித்துவந்தார் சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஆர்.கே சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அந்த சின்னத்தையே தமது அணிக்கு ஒதுக்கிடும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.

சில நாட்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளதுடன், அவர் பரிந்துரைத்துள்ள 3 பெயர்களில் ஏதேனும் ஒன்றினை வழங்கிடுமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில் தான், நாளை மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கவுள்ளார் தினகரன்.

சிலர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடத்தில் நாம் பேசியதில், டிடிவி தினகரன் துவங்கவிருக்கும் கட்சியின் பெயர் எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் எனவும், அக்கட்சிக்கு பொதுச்செயலாளர் சசிகலா எனவும், துணைப்பொதுச்செயலாளர் தினகரன் எனவும் சில தெரிவிக்கின்றனர். அதே சமயம், என்ன கட்சி துவங்கினாலும் எங்களை அசைக்க முடியாதென மார்தட்டி நிற்கிறது எடப்பாடி – ஓபிஎஸ் அணி.

வலியவை பிழைத்திருக்கும் என்பதனை மெய்ப்பிக்க உள்ளவர்கள் யாரோ.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*