கருத்துகணிப்பு : திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஜெயிக்க போவது யார்?


விடுகதை : காற்று வீசும் மரம்; கையிலிருக்கும் மரம். அது என்ன?


”நீ என்ன மக்களின் தலைவனாக பார்க்கிறாயா?’என்று திட்டியுள்ளனர்.,

போபால்: மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரை, கொலை செய்ய போகிறோம் என்று 2 நாள் முன்பு பேஸ்புக்கில் தகவல் கொடுத்துவிட்டு உயர் சாதி இந்துக்கள் கொலை செய்து இருக்கிறார்கள். 

தலித் சமூகத்தை சேர்ந்த கோபி பரியா என்பவர், பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவரது தந்தை தாராசந்த்,அவரும் அதே கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கோபி இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடு தழுவிய தலித் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மேலும் மத்திய பிரதேசத்தின் சோபாபூர் பகுதியில் நடந்த போராட்டத்திற்கும்  கோபிதான்  தலைமை தாங்கியுள்ளார்.

இதனால் இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது உயர்சாதி இந்துக்கள் கோபத்தில் இருந்துள்ளனர்.     மேலும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 83 தலித் இளைஞர்களின் பெயர்களை தங்கள் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு இதில் ஒவ்வொரு நபராக கொலை செய்ய இருக்கிறோம் என்று உயர் சாதி இந்துக்கள் வெளிப்படையாக பேசியுள்ளனர். 

அதுமட்டுமின்றி சில பேஸ்புக் பக்கங்களில் இந்த 83 பேரின் புகைப்படமும் வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர்.  இந்த 83 பேர் பட்டியலில் முதலில் இருந்தது கோபி பரியா. இவர் மீதுதான் உயர்சாதி இந்துக்கள் அதிக கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் உயர்சாதி சமூகத்தை சேர்ந்த மனோஜ் என்ற கோபியின் நண்பர் கோபியை போன் செய்து பேச வேண்டும் என்று கூறி மைதானத்திற்கு கூப்பிட்டு உள்ளார். அந்த இடத்தில்பேஸ்புக் போஸ்டை வெளியிட்ட நபர்களில் சிலரான உயர்சாதியை சேர்ந்த ஆஷிஷ், கபில், கிரிதாரி ஆகிய நபர்கள் இருந்துள்ளனர் .

கோபி மைதானத்திற்கு வந்ததும்,அவர்கள் கோபியை தாக்கி இருக்கிறார்கள். அதோடு ”நீ என்ன தலித் மக்களின் தலைவனாக பார்க்கிறாயா?” என்று திட்டியுள்ளனர். அதன்பின் கோபி உடலில் மொத்தம் ஐந்து இடங்களில் சுட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோபி இந்த தகவலை போலீசுக்கு வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கோபி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்..தற்போது மனோஜ், ஆஷிஷ், கபில், கிரிதாரி ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது.மேலும் பேஸ்புக் போஸ்ட் போட்ட மற்ற நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *