அஜித் சிவா கூட்டனி  4வது படத்திற்கு ‘விசுவாசம்’!

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் சிவா கூட்டனி இணையும் 4வது படத்திற்கு ‘விசுவாசம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விவேகம் படத்தை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் தன்னுடைய 58வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் எப்போது தொடங்கும், யார் யார் நடிக்கின்றனர் என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


இந்நிலையில் அஜித்தின் 58வது படத்தின் பெயர் ‘விசுவாசம்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தீபாவளி 2018 ரிலீஸ் என்றும் பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார். படத்தின் அறிவிப்பை வெளிட்ட பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் #Viswasam என்னும் ஹேஷ்டேகை ட்ரெண்டாகி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *