கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : பச்சைக் கதவு; வெள்ளை ஜன்னல்; உள்ளே கருப்பு ராஜா. அது என்ன?


கந்துவட்டியினால் 7 கோடி ரூபாய் வீட்டை இழந்த பிரபல நடிகர்!

கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இணை தயாரிப்பாளர் அசோக் குமார் போன்று இனி எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது என சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தன் 20 லட்ச ரூபாய் கடனுக்காக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றதாக தெரிவித்துள்ளார்.

“வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளரசவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன். இன்று அதன் மதிப்பு ஏழு கோடி ரூபாய். வாங்கிவிடலாம், இன்னும் சரியான படம் பண்ணுனா நாளைக்கே வாங்கிவிடலாம் என்று நினைத்து இன்றுடன் 13 வருஷம் ஆகிவிட்டது. இப்பவும் என் வாழ்க்கையில் பெரிய தவறாக நினைப்பது அதைத்தான். ஆனால், மனசில் என்ன சந்தோஷம் என்றால், ‘யாருக்கும் நம்ம 10 பைசாகூட பேலன்ஸ் வைக்கவில்லை” என்பதுதான்” என பார்த்திபன் கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *