ஆணாக நடித்து 3 பெண்களை திருமணம் செய்த பெண்!

ஆணாக நடித்து 3 பெண்களை திருமணம் செய்தது ஏன்? இளம்பெண் வாக்குமூலம்
ஆந்திராவின் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு அருகே உள்ள இடிகலபாடு கிராமத்தை சேர்ந்தவர் ரமாதேவி.

21 வயதான ரமாதேவி, ஆண் வேடமிட்டு தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் புகார் அளித்தார்.

இதன்பேரில் ரமாதேவியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்திய போது தான் இதற்கு முன்பு இருவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இளம்பெண் மீனா அளித்த புகாரின் பேரில் ராமதேவியை கைது செய்து விசாரணை நடத்தினோம்.

சிறுவயது முதலே தன்னை ஆணாக பாவித்துக் கொண்டு சிகை அலங்காரம், உடை என ஆணை போலவே மாற்றிக் கொண்டார்.

இருவரும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முதலிரவு அன்று ஏதோ காரணங்களை கூறி ரமாதேவி தப்பித்துள்ளார், அடுத்த நாளும் அதைப் போன்று நடக்கவே சந்தேகமடைந்த மீனா ராமதேவியை கண்காணித்துள்ளார்.

அப்போது தான் அவர் ஆண் அல்ல, பெண் என தெரிந்தது, உடனடியாக மீனா தன் பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார்.

அதற்குள் ரமாதேவி தப்பித்து சென்னை வந்துவிட்டார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரமாதேவிக்கு நடந்த கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என்றும், அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*