எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடினால் மட்டும் போதுமா?

200 பயணிகளை கொண்ட ஒரு விமானம் கடலில் விழுந்து காணாமல் போகும் போது எண்ணற்ற போர் விமானங்களையும் கடற்படை கப்பல்களையும் அனுப்பி தேடும் அரசு,
1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலால் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க ஏன் இவ்வளவு மெத்தனம்?


தொலைந்து போனது சாதாரன ஏழை மீனவனின் உயிர் என்பதாலா? ஒரு வேலை இது சர்வதேச செய்தியாக இல்லை என்பதாலா? இதற்கும் தமிழர்கள் பன்னாட்டு சர்வதேச ஆணையத்தின் உதவியை நாடவேண்டுமோ?

ஒக்கி புயல் பாதிப்பால் தமிழக மீனவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், லட்சத்தீவுகளில் கரை ஒதுங்கியிருந்தாலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.


அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு மந்தமாக செயல்படுவதாகவும், உரிய முறையில் தேடுதல் பணியில் ஈடுபடவில்லை எனவும் குமரி மாவட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த கேரள மீனவர்களுக்கு 25 லட்ச ரூபாயும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் வழங்குவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மீனவர்ளை நேரிலும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.ஆனால், தமிழக அரசோ இறந்தவர்களுக்கு 4 லட்சம் மட்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுவரை தமிழக முதல்வர் குமரிக்கு செல்லவேயில்லை.இதற்கு கண்டனம் தெரிவித்தும் மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் மீணவர்கள், பெண்கள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய அளவில் நெருக்கடி ஏறப்பட கூடிய அளவிற்கு பிரச்சனைகள் வீறுகொண்டு எழுந்திருக்கும் நிலையில், முதல்வர் ஆர்.கே நகரில் வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

அந்த அளவிற்கு தீவிரமானது இந்த பேரிடர். இன்னமும் பலரின் குடும்பமும் வாசலை திறந்து எப்போது சொந்தம் நம்மை தேடி வரும் என்று ஏங்கி கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *