கருத்துகணிப்பு : அஇஅதிமுக வில் பலம் பெற்றுள்ளது யார்? நியூஸ் 7 க்கு போட்டி கருத்துக்கணிப்பு


விடுகதை : காட்டில் இருப்பான்; வீட்டிலும் மணப்பான், அவன் யார்?


கருத்துக் கணிப்பில் முந்துகிறார் டிடிவி தினகரன்

ஆர்.கே.நகரில் யார் முந்துவார்கள் என்பது குறித்து பேராசியர் ராஜநாயகம் குழுவினர் இரண்டாங்கட்ட கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் டிடிவி தினகரன் முந்துவதாக மீண்டும் பதிவிட்டுள்ளார்.

லயோலா கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜநாயகம் கடந்த வாரம் முதல் கட்ட கருத்துக் கணிப்பை வெளியிட்டார். அதில் டிடிவி தினகரன் முந்துவதாக தெரிவித்திருந்தார். இன்று இரண்டாங்கட்ட கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளார். அதிலும் டிடிவி தினகரனே முந்த வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்கு என்பதில் முதலிடத்தில் டிடிவி தினகரன் உள்ளார். டிடிவி தினகரன் 37.4 சதவீதமும், மருது கணேஷ் திமுக 24.3 சதவீதமும், மதுசூதனன் அதிமுக 22.1 சதவீதமும், கலைக்கோட்டுதயம் நாம் தமிழர் கட்சி 4.8 சதவீதமும், யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காதவர் 7.1 சதவீதத்தினர்.

இதில் முதலிடத்தில் தினகரன் இருக்கிறார் என்று பேரா.ராஜநாயகம் குறிப்பிட்டாலும் குழப்ப நிலையில் உள்ள 7.1 சதவீத வாக்காளர்களாலும், கடைசி 48 மணி நேர கமுக்கச் செயல்பாடும், இயல்பு மீறிய வாக்குப்பதிவும் மட்டுமே தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *