கருத்துகணிப்பு : பிக்பாஸ் 2 இந்த வாரம் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள்?


விடுகதை : அண்ணனும் தம்பியும் விர்னு போகிறார்கள். அவர்கள் யார்?


பி.ஜே.பி சார்பாக ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால்!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் குதிப்பார் என்று கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஷாலை வேட் பாளராக நிறுத்த முக்கிய அரசியல் கட்சி முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் கமல் ஹாசனும், நடிகர் விஷாலை தேர்தலில் போட்டியிடச் செய்து ஆதரவு அளித்து அரசியலில் ஆழம் பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் பரவுகிறது. சினிமா உலகில் ஊழல் பரவி யுள்ளதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய விஷால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி நடிகர் விஷாலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். இன்னும் 2 நாளில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவு எடுப்பேன் என்றார்.

சுயேட்சையாக போட்டியிடுவீர்களா? அல்லது அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படுவீர்களா? என்று விஷாலிடம் கேட்டதற்கு, “நான் முடிவு எடுத்த பிறகு எல்லா விஷயங்கள் பற்றியும் சொல்கிறேன்” என்றார்.

இதன் மூலம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. 4-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்னும் 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் 4-ந்தேதி அவர் முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *