செருப்பால் அடித்து விரட்டுங்கள் : ரஜினியை கிழித்து தொங்க விட்ட நடிகர்!

பேருந்து கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சமத்துவக்கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், காவிரி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பாபா முத்திரை என்று கூறி ஆட்டுத்தலையை காட்டி வருகிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.

தமிழக அரசு கடந்த 20-ம் தேதி அறிவித்த பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொள்ளவதற்காக வந்த நடிகர் சரத்குமார் சைக்கிளில் பயணம் செய்து போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், பேருந்து கட்டணம் உயர்வுக்கு மாநில அரசை கண்டித்ததோடு மட்டுமின்றி புதியதாக அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர்கள் குறித்தும் பேசினார்.

அப்போது அவர், காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிய ரஜினி, உடனடியாக அமெரிக்காவிற்கு பறந்துவிட்டார் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல என்றும் அது ஆட்டுத் தலை என்றும் கடுமையாக சாடினார். மேலும், ஓட்டுக்கு பணம் கொடுக்க யார் வந்தாலும் சரி, அவர்களை செருப்பால் அடியுங்கள் என்றும் ஆவேசமாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *