ஜெயலலிதா மரணம் ஓபிஸை விசாரிக்காதது ஏன்? : நாஞ்சில் சம்பத்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க சம்மன் அனுப்பாதது ஒரு தலைப்பட்சமானது என டிடிவி தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது “எங்கள் கட்சி அதிமுகதான். விரைவில் தேர்தல் வந்தால் ஒரு அமைப்பு தேவை என்ற அடிப்படையில்தான் டிடிவி தினகரன் பேசியுள்ளாரே தவிர தனிக்கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இதில் எங்களுக்குள் குழப்பமில்லை. நாங்கள் வீட்டுக்கு செல்வோமே தவிர ஒரு காலத்திலும் எடப்பாடி, ஓபிஎஸ்ஸை ஆதரிக்கமாட்டோம். அதற்காக கையெழுத்து போட்டு தரவும் தயார்” என்று தெரிவித்தனர்.

தொடந்து “ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன், எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை. மேலும் அங்கிருந்த பல அமைச்சர்களையும் விசாரிக்கவில்லை. அதனால் இது ஒரு தலைப்பட்சமானது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு பிறகு அதிகரித்துள்ளது. விரைவில் ஒவ்வொருவரும் மாறி, மாறி நீக்குவதாக அறிக்கை வெளியாகும்” என்றனர்.

மேலும் “பாஜகவும், ரஜினியும் இணைந்து உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே…. என்ற கேள்விக்கு,

“பாஜகவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு ஏற்பட்ட முடிவுதான் ஏற்படும். இருவரும் இணைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரிடம் கூட கிடைக்காது” என்றனர். “ஆர்.கே. நகர் முடிவு தொடர்பாக நடிகர் கமல் கடுமையாக விமர்சித்துள்ளாரே…..

விரைவில் பல நடிகர்கள் கட்சித் தொடங்க உள்ளார்களே அது உங்களுக்கு பாதிப்பா என்று கேட்டதற்கு, “உண்மையில் ரஜினி, கமல் கட்சித்தொடங்க மாட்டார்கள்” என்று தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*