தளபதி விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கிறேன் – மோகன் ராஜா!

‘மெர்சல்’ படத்தையடுத்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார் இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன்னரே இவருடைய அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படத்தை இயக்கிய மோகன் ராஜா இப்படத்தை இயக்குவார் என்று ஒரு புற செய்திகள் வெளியானதை தொடர்ந்து மோகன் ராஜாவும் சமீபத்தில் விஜய்யை சந்தித்தாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார், இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் ‘விஜய் படத்தை மீண்டும் இயக்குவீர்களா?’ என்று கேட்டதற்கு ‘காத்துக்கொண்டிருக்கிறேன் என்று மோகன் ராஜா பதிலளித்துள்ளார், இதனால் விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*