விளையாட்டு வீராங்கனையை ஆபாசமாக வீடியோ எடுத்த விடுதி ஊழியர்!

சென்னையில் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையை குளியறையில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய அளவிலான Basket Ball Championship தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள வந்த உத்ரகாண்ட் மகளிர் அணியினர் பெரியமேட்டில் உள்ள 4U Business class Hotel என்ற தனியார் விடுதியில் தங்கி இருந்தனர்.
நேற்றிரவு இவர்கள் தங்கியிருந்த குளியல் அறையை, செல்போன் மூலம் போட்டோ எடுத்த மேற்குவங்க மாநிலத்தை சார்ந்த கட்டடத் தொழிலாளி அலாவுதீன் உசேனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற காவலில் குற்றவாளியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*