முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா

காதலியை நண்பருடன் சேர்ந்து கற்பழித்த காதலன்..!!

Tags : Chennai, Rape, Young Girl, Category : NEWS,


காதலியை தனிமையில் வரவழைத்து நண்பருடன் சேர்ந்து கற்பழித்த காதலன்..!! இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா என்ற இளம் பெண்.

லாவண்யா அசோக் குமார் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளனர்.அசோக் குமாரும் லாவண்யாவை உயிருக்கு உயிராக காதலித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், லாவண்யா வீட்டில் அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.திருமணத்திற்கு பிறகு லாவண்யா அசோக்குமாரின் தொடர்பை அடியோடு துண்டித்துள்ளார்.

தனது காதலை தியாகம் செய்து பெற்றோர் நிம்மதிக்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட போதும், அவருடன் சந்தோஷமாக வாழவில்லை என தெரிகிறது.

திருமணம் ஆன சில மாதங்களிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதை எப்டியே தெரிந்து கொண்ட காதலன் அசோக்குமார் லாவண்யாவை தொடர்புகொண்டு தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.அதற்க்கு லாவண்யா மறுத்துள்ளார்.

இதனால்,ஆத்திரமடைந்த அசோக்குமார் நாம் இருவரும் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

நான் சொல்லுமிடத்திற்கு வந்தால் அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தந்துவிடுகிறேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.இதனை அடுத்து லாவண்யாவும் பயத்தில் அவன் சொன்ன இடத்திற்கு வந்துள்ளார்.

லாவண்யாவை கார் ஒன்றில் ஏற்றிக்கொண்டு தனது நண்பருடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு வைத்து
அசோக்குமார் மற்றும் அவரின் நண்பர் இருவரும் சேர்ந்து லாவண்யா மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

அந்த சமயத்தில்,அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லாவண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்துள்ளனர். போலீசார் பார்த்தபோது லாவண்யாவை நிர்வாணபடுத்தி அவரை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து லாவண்யாவை மீட்ட போலீசார்,அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share :

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு
அரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
திருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Related Posts