அன்புச்செழியனுக்கு அடைக்கலம் கொடுத்த அமைச்சர்!

தனது இல்ல காதணி விழாவில் பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 28-ஆம் தேதி மதுரை பாண்டிகோவிலில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெற பிள்ளைகளுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

 

இந்த விழாவில் கந்துவட்டி புகாருக்கு ஆளான சினிமா பைனான்சியர் அன்புச்செழியனும் கலந்துகொண்டார். அவர், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருடன் பேசியதாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தனது இல்ல விழாவுக்கு அன்புச்செழியன் வந்ததில் தவறொன்றும் இல்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அன்புச்செழியன் ஒன்னும் தேடப்படும் குற்றவாளி கிடையாது. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை, அவர் சட்டரீதியாகச் சந்தித்து வருகிறார்.

சினிமா துறையில் உள்ளவர்கள் அன்புச்செழியன் நல்லவர் என்று தான் கூறுகின்றனர். அதனால், அவர் எனது இல்ல விழாவில் கலந்துகொண்டதை சர்ச்சையாக்குவது தேவையற்றது” என்று செல்லூர் ராஜு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *